
Jos Buttler Hopes To Emulate Rishabh Pant’s Heroics In Australia (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி மன்னனாக விளங்கி வருபவர் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர். நடந்து முடிந்த டி-20 உலகக் கோப்பை தொடரில் கடினமான ஆடுகளத்தில் களமிறங்கி சதம் விளாசினார்.
தற்போது ஜாஸ் பட்லர் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஜாஸ் பட்லர் தனது கருத்துக்களை எழுதி இருந்தார்.
அதில் “டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வெல்லும் என்று நம்பினேன். ஆனால் தற்போது அரையிறுதியில் வெளியேறியது மிகுந்த மன வேதனையை தந்தது. தற்போது கிரிக்கெட்டை பற்றி நினைக்காமல் துபாயில் விடுமுறையை கழித்து வருகிறேன்.