Jos Buttler Smashes An Explosive Ton, Creates A New Record As An English Cricketer (Image Source: Google)
டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லரின் அபார சதத்தினால் 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய இலங்கை அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. மேலும் இப்போட்டியில் சதம் விளாசிய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டதுடன், பல சாதனைகளையும் படைத்துள்ளார்.