
Jos Buttler to return home with broken finger (Image Source: Google)
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் 4 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் 3 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது.
நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பு வரை சென்ற ஆஸ்திரேலிய அணியானது இறுதியில் ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தங்களது 4ஆவது வெற்றியை நூலிழையில் தவறவிட்டது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது போட்டி இன்னும் சில தினங்களில் ஹாபர்ட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு தற்போது இங்கிலாந்து அணியின் ஆட்டம் மோசமாக இருந்து வருகிறது.