
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் கிரைக் பிராத்வெயிட் 13 ரன்களில் வெளியேற சந்தர்ப்பால் 6 ரன்களில் வெளியேறினார்.
இதை அடுத்து மெக்கன்சி அபாரமாக விளையாடி அரை சதம் கடந்தார். இளம் வீரர் அலிக் அதனாஸ் 13 ரன்களிலும், ஹாஜ் 12 ரன்களிலும் ஜோஸ்வா டி சில்வா 6 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் ஷமர் ஜோசப் மட்டும் 36 ரன்கள் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணி 62.1 ஓவரில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சு தரப்பில் பேட் கம்மின்ஸ் மற்றும் ஹசில்வுட் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் தங்களுடைய முதல் இன்னிங்சில் விளையாடியது. வார்னர் ஓய்வு பெற்ற பிறகு அந்த இடத்திற்கு ஸ்மித் விளையாடினார். ஸ்மித் 12 ரன்கள் இருக்கும்போது ஷமர் ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் அறிமுக வீரராக களம் இறங்கிய ஷமர் ஜோசப் தாம் வீசிய முதல் பந்தலியே ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.