
முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஐபிஎல் தொடர் வரலாற்றில் 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதித்துள்ளது. அதேசமயம் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் ஆர்சிபி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுயாஷ் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக அதிகமுறை 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் அனில் கும்ப்ளேவின் சாதனையை ஜோஷ் ஹேசில்வுட் சமன்செய்து அசத்தியுள்ளார். இருவரும் தலா 2 முறை 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.