
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளவர் ஜோஷ் ஹசில்வுட். இவர் ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் (2021), ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு (2022) அணிகளுக்காக வெற்றிகரமாக விளையாடி உள்ளார். 2021 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியிலும் சிறப்பாக பந்து வீசினார். அதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியிலும் அவர் இடம்பெற்றுள்ளார். மேலும் இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவனிலும் ஜோஷ் ஹசில்வுட் இடம்பிடித்துள்ளார்.
இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட்க்கு ஆஸ்திரேலியா டி20 அணியில் அதிகமான வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் கருத்துத் தெரிவித்துள்ளார்.