AUS vs SA, 1st Test: பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் நட்சத்திர வீரர் ஜோஷ் ஹசில்வுட் இடம்பெறவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக டெஸ்ட் சான்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலிய அணி முன்னோக்கி செல்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்துக்கு பின்னர் தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் மிக முக்கியமாக தொடராக பார்க்கப்படுகிறது.
Trending
ஏனெனில் இந்த தொடர் உல்க டெஸ்ட் சான்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இந்த தொடரை வெல்ல இரு அணிகளும் மிக கடுமையாக போராடுவர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை வென்ற உற்சாகத்தில் இருப்பதால் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடுவதை எதிர் நோக்கி உள்ளனர்.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாத கேப்டன் பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்புகிறார். அதே போல் காயம் காரணமாக விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் அணியில் இடம் பெறவில்லை.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 17ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசாக்னே, நாதன் லயன், லேன்ஸ் மோரிஸ், மைகேல் நேசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.
Win Big, Make Your Cricket Tales Now