
Josh Hazlewood To Be Available For UAE Leg Of IPL 2021 (Image Source: Google)
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், கரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதற்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. மேலும் டி20 உலகக்கோப்பை தொடரும் நெருங்குவதால் வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் பங்கேற்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடு அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.