Advertisement
Advertisement
Advertisement

எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

எஸ்ஏ20 தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan January 31, 2024 • 13:54 PM
எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன
எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவின் உள்ளுர் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டி மழை காரணமாக முழுவதும் கைவிடப்பட்ட நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்
  • இடம் -  வாண்டரர்ஸ் மைதானம், ஜோஹன்னஸ்பர்க்
  • நேரம் - மாலை 5 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் ஜோஹ்ன்னஸ்பர்க் ஆடுகளம் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக இருக்கும். இதனால் இங்கு பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து இமாலய இலக்கை நிர்ணயிப்பது வெற்றிக்கு உதவும்.

நேரலை

இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - 01
  • சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - 01
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்: ஃபாஃப் டூ பிளெசிஸ் (கே), ரீசா ஹென்ட்ரிக்ஸ், லியூஸ் டு ப்ளூய், வெய்ன் மேட்சன், மொயீன் அலி, டோனோவன் ஃபெரீரா, டேவிட் வைஸ், லிசாத் வில்லியம்ஸ், நந்த்ரே பர்கர், இம்ரான் தாஹிர், கைல் சிம்மன்ட்ஸ்.

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்: டேவிட் மாலன், ஜோர்டான் ஹெர்மன், ஐடன் மார்க்ரம் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பேட்ரிக் க்ரூகர், லியாம் டௌசன், டாம் ஆபெல், மார்கோ ஜான்சென், சைமன் ஹார்மர், ஓட்னியல் பார்ட்மேன், டேனியல் வோரால்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • பேட்டர்ஸ்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ்(கே), டேவிட் மலான், டாம் ஆபெல், லுயிஸ் டூ ப்ளூய்
  • ஆல்-ரவுண்டர்கள்: மொயின் அலி, ஐடன் மார்க்ரம்(துணைக்கேப்டன்), மார்கோ ஜான்சன்
  • பந்துவீச்சாளர்கள்: ஓட்னியல் பார்ட்மேன், நந்த்ரே பர்கர்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement