சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த ககிசோ ரபாடா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா படைத்துள்ளர்.
வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தாக்காவில் தொடங்கியது. தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஷாத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஷாத்மான் இஸ்லாம் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய ஷாத்மான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொமினுல் ஹக் 4 ரன்களிலும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சனடோ 7 ரன்னிலும் என அடுத்தடுத்து வியான் முல்டர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தார்.
Trending
பின்னர் களமிறங்கிய முஷ்ஃபிக்கூர் ரஹிம் 11 ரன்னிலும், லிட்டன் தாஸ் ஒரு ரன்னிலும் என காகிசோ ரபாடா பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மெஹிதி ஹசன் மிராஸும் 13 ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் வங்கதேச அணியானது 60 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய காகிசோ ரபடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதன்படி, இப்போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி காகிசோ ரபாடா அசத்தினார். மேற்கொண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை (பந்துகள் அடிப்படையில்) வீழ்த்திய வீரர் எனும் பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் சாதனையை முறியடுத்து காகிசோ ரபாடா புதிய சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக வக்கார் யூனிஸ் 12,602 பந்துகளில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது காகிசோ ரபாடா முறியடித்ததுடன் 11,817 பந்துகளில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளார். இந்த பட்டியளில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் டேல் ஸ்டெயின் 12,605 பந்துகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய 6ஆவது வீரர் எனும் பெருமையை காகிசோ ரபாடா பெற்றுள்ளார். முன்னதாக டேல் ஸ்டெயின், ஷான் பொல்லாக், மகாயா நிடினி, ஆலா டொனால், மோர்னே மொர்க்கல் ஆகியோருக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணிக்காக 300 விக்கெட்டுகளை கைப்பற்றி காகிசோ ரபாடா அசத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now