Advertisement
Advertisement
Advertisement

ஆஸி வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு!

கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலை கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 07, 2022 • 16:28 PM
Kane, Jhye Richardson Miss Out On Cricket Australia's Contract List
Kane, Jhye Richardson Miss Out On Cricket Australia's Contract List (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. மொத்தம் 20 வீரர்கள் அடங்கிய இந்தப் பட்டியலில் ஜை ரிச்சர்ட்சமின் பெயர் இடம்பெறவில்லை. ஜோஷ் இங்கிலிஷ் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார். 25 வயது வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன், ஆஸ்திரேலிய அணிக்காக 2019 முதல் கடந்த பிப்ரவரி வரை 3 டெஸ்டுகள், 13 ஒருநாள், 16 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

கடந்த வருடம் வெளியிடப்பட்ட 17 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த டிம் பெயின் (தற்காலிக ஓய்வு), ஜேம்ஸ் பாட்டின்சன் (ஓய்வு), கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் தற்போதைய ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. 

Trending


ஒப்பந்தப் பட்டியலில் இல்லாத வீரர்களும் இனிமேல் இடம்பெறலாம். அவர்கள் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி 12 புள்ளிகளைப் பெற்றால் பட்டியலில் இடம்பெறுவார்கள். ஒரு டெஸ்டில் விளையாடினால் 5 புள்ளிகளும் ஒரு ஒருநாள் ஆட்டத்துக்கு 2 புள்ளிகளும் ஒரு டி20க்கு ஒரு புள்ளியும் வழங்கப்படுகின்றன. 

கடந்த வருடம் அதுபோல ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறாத டிராவிஸ் ஹெட், ஸ்டாய்னிஸ், ஸ்வெப்சன், ஸ்காட் போலண்ட், உஸ்மான் கவாஜா, மிட்செல் மார்ஷ் ஆகியோர் நடுவில் இணைக்கப்பட்டார்கள். 

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்தப் பட்டியல்:

ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச், கேம்ரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஷ், உஸ்மான் கவாஜா, லபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஸ்டாய்னிஸ், ஸ்வெப்சன், டேவிட் வார்னர், ஸாம்பா


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement