
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நவம்பர் இன்று பெங்களூருவில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சுமாராக விளையாடி குசால் பெரேரா 51, தீக்ஷனா 38 ரன்கள் எடுத்த உதவியுடன் 172 ரன்களை மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 45, ரச்சின் 42, டார்ல் மிட்சேல் 43 ரன்கள் எடுத்து 23.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றியால் 10 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து 4ஆவது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளின் அரையிறுதி கனவில் இடி விழுந்துள்ளது.
இந்த வெற்றி குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேசுகையில், “எங்களின் அணி வீரர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்றியதும், ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் வீசியதன் மூலம் சவால் அளித்தோம். அதன்பின் பிட்ச் கொஞ்சம் மிதமாக மாறியது.