
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நேற்று அகமதாபாத்தில் கோலாகல்மாக தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. பரபரப்பாக சென்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்தது. ருத்துராஜ் 92 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 179 ரன்களை சேஸ் செய்த குஜராத் அணி 19.2 ஓவர்களில் சேஸ் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த சீசனில் இரண்டு போட்டிகள் மற்றும் இந்த போட்டி என சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஃபார்மில் இருந்து வரும் கேன் வில்லியம்சன் கடந்த ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். அப்போதே அணியின் நம்பர் 3 பேட்ஸ்மேன் இவர்தான் என்று உறுதியானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் பிளேயிங் லெவனிலும் விளையாட வைக்கப்பட்டார்.