
நாளை மும்பை வான்கடே மைதானத்தில் ஐசிசி உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் எதிர்த்து விளையாட இருக்கின்றன. இந்த உலகக் கோப்பை தொடருக்கு நியூசிலாந்து அணி பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் நுழைந்தது. ஆனால் வழக்கம்போல் எல்லா ஐசிசி தொடர்களிலும் பெரும்பாலும் அரையிறுதியை எட்டி விடுவதைப் போல, இந்த முறையும் அரையிறுதிக்கு வந்துவிட்டது.
மிகக்குறிப்பாக இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஐபில் தொடரில் காயம் அடைந்த கேப்டன் கேன் வில்லியம்சன் தாமதமாகவே உலகக் கோப்பை தொடரில் விளையாட ஆரம்பித்தார். ஆனால் விளையாடிய முதல் போட்டியிலேயே காயமடைந்து மீண்டும் விளையாட முடியாமல் சென்றார். இதற்கு அடுத்து மீண்டும் மிக முக்கியமான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வந்து சிறப்பாக விளையாடி 90 ஆண்டுகளுக்கு மேல் எடுத்தார்.
இரண்டே போட்டிகள் மட்டும் விளையாடி இருந்தாலும் இரண்டு போட்டிகளிலும் அரை சதம் அடித்திருக்கிறார். மேலும் இந்தியாவில் விளையாடினாலும் கூட நியூசிலாந்து அணியின் பிரதான சிலர் பந்துவீச்சாளர் சோதிக்கு பெரிய அளவில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். தற்பொழுது நியூசிலாந்து அணி பேட்டிங் வரிசையை பலப்படுத்தி, பவுலிங் யூனிட்டில் மூன்று பேரை மட்டும் நம்பி களம் இறங்கி சாதித்து வருகிறது. பேட்டிங் வரிசை பலமாக இருக்கின்ற காரணத்தினால், அரையிறுதியையும் எட்டிவிட்டது.