
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியதுடன் கோப்பையை வெல்லும் வாய்ப்பை மீண்டும் ஒருமுறை தவறவிட்டது.
இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் சொந்த மண்ணில் மூன்று போட்டிகளை கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது எதிவரும் நவம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நவம்பர் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது.
அதேசமயம் ஒருநாள் தொடரானது டிசம்பர் 04ஆம் தேதி முதலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணியின் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் ஃபிரேயா கெம்ப் மற்றும் மையா பௌச்சர் ஆகியோர் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார்.