
Karan and Lamichhane star as Nepal ambush Oman (Image Source: Google)
ஐசிசி உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் 2019 - 2022 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் நேபாள்- ஓமன் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அமெரிக்க முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஓமன் அணி சந்தீப் லமிச்சானே, கரன் கேசி பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்மூலம் அந்த அணி 37.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஓமன் அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஸீஷன் மக்சூத் 41 ரன்களைச் சேர்த்தார். நேபாள் அணி தரப்பில் சந்தீப் லமீச்சானே, கரன் கேசி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.