
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இந்த நிலையில் அது குறித்து ட்வீட் செய்திருந்தார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர். அதற்கு இந்திய வீரர் முகமது ஷமி பதில் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சூப்பர் 12 சுற்றில் கடைசி நேரத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. இந்த நிலையில்தான் தோல்வியை தழுவி உள்ளது பாகிஸ்தான். அதனால் அந்த அணியின் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தரும் அடங்குவார். அவர் உடைந்த இதயத்தின் எமோஜியை பகிர்ந்து ட்வீட் செய்திருந்தார். ‘மன்னிக்கவும் சகோதரா. இதை கர்மா என்பார்கள்’ என ஷமி பதில் அளித்துள்ளார். அது ரசிகர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷமி தேர்வு செய்த போது அக்தர் விமர்சித்ததாக தகவல்.