
Karthik Meiyappan stars UAE beat Ireland by 54 runs (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகம் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான சம்மர் டி20 பேஷ் தொடரின் 3ஆவது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணிக்கு கிரேக் சுரி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் அரைசதம் கடந்த சுரி 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பி முகமது உஸ்மான் - பசில் ஹமீத் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அமீரக அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 163 ரன்களைச் சேர்த்தது.