
Karunaratne, De Silva Take Sri Lanka's Lead Past 300 Against Pakistan At Stumps On Day 3 (Image Source: Google)
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நசிம் ஷா, யாசிர் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த இமான் உல் ஹக் - கேப்டன் பாபர் ஆசாம் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். ஆனாலும் 32 ரன்களில் இமான் உல் ஹக்கும், 16 ரன்களில் பாபர் ஆசாமும் விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய முகமது ரிஸ்வான், ஃபவத் ஆலாம் ஆகியோர் தலா 24 ரன்கள் சேர்த்த நிலையில் ரமேஷ் மெண்டிஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.