
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஆகஸ்ட் 07) டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் விளையாடும் இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் இத்தொடரானது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாகவும் நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளன. இதனல் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரர் கேசி கார்டிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்த அணியில் ஜோஷுவா டா சில்வா, அலிக் அதானஸ், ஜேசன் ஹோல்டர், காவெம் ஹட்ஜ், மைக்கைல் லூயிஸ் மற்றும் குடகேஷ் மோட்டி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் வேகப்பந்து வீச்சாள் கீமார் ரோச் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.
The playing XI is in!
— Windies Cricket (@windiescricket) August 6, 2024
Keacy Carty will debut in the 1st Test against South Africa at Queen's Park Oval.#WIvSA #MenInMaroon pic.twitter.com/NY9Vue7sOn