
ஆறடிக்கும் மேல் உயரமுள்ள வெங்கடேஷ் ஐயர், கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக களமிறங்கி, ஆர்சிபி பவுலர்கள் அனைவரையும் ஓடவிட்டார். கேகேஆர் நிர்வாகமே இவர் இந்தளவு சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்திருக்காது போல. அந்தளவு நேற்று அனைவரையும் கவர்ந்துவிட்டார்.
குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்திய கைல் ஜேமிசன் ஓவரை, நேற்று வெங்கடேஷ் டீல் செய்தது வியக்க வைத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த வெங்கடேஷ் 27 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார். இதில், 7 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். அவர் சிக்ஸ் அடித்தது கைல் ஜேமிசன் ஓவரில். அதுவும், 90 மீட்டர் சிக்ஸ் அது.
நேற்று தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் போட்டியில் அவர் விளையாடினார். ஆனால், கண்களிலும் துளி பயம் இல்லை. ஏதோ, 10 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு தேர்ந்த கிரிக்கெட்டரைப் போல பந்துகளை க்ளீயர் செய்தார் வெங்கடேஷ். இதன் மூலம் கொல்கத்தா அணியின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒருவராக வெங்கடேஷ் உருவடுத்துள்ளார்.