
ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இது ஒரு புறம் இருக்க இந்திய அணியின் அதிரடி வீரர் கௌதம் காம்பீர், கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தோனி அடித்த சிக்ஸர் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இணைந்து நடத்தின. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்தது.
பின்னர், கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சேவாக் மற்றும் சச்சின் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். அடுத்து வந்த கௌதம் காம்பீர் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அவர் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தோனி மற்றும் யுவராஜ் சிங் இருவரும் இணைந்து கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். தோனி 91 ரன்னுடனும், யுவராஜ் சிங் 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.