ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜோசுவா டா சில்வா 79 ரன்களையும், கெவின் சின்க்ளெர் 71 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட், நாதன் லையன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 24 ரன்களுக்குகே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷாக்னே 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கீமார் ரோச் பந்துவீச்சில் கிவின் சின்க்ளேர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவியன் திரும்பினார்.
A fourth-slip SCREAMER!
— cricket.com.au (@cricketcomau) January 26, 2024
Kevin Sinclair is having a debut to remember! #PlayOfTheDay | @nrmainsurance | #AUSvWI pic.twitter.com/jrwK4jmkuD