
Kieron Pollard 700 T20 Matches: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் அணிக்காக கீரன் பொல்லார்ட் விளையாடியதன் டி20 கிரிக்கெட்டில் தனது 700ஆவது போட்டியில் பங்கேற்றுள்ளார்.
எம்ஐ நியூயார்க் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணியில் மேத்யூ ஷார்ட் மற்றும் டிம் செஃபெர்ட் 91 ரன்களையும், ஜேக் ஃபிரேசர் மெக்குர் 64 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 246 ரன்களைச் சேர்த்தது. நியூயார்க் தரப்பில் கீரன் பொல்லர்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் அணியில் மொனாங்க் படேல் 60 ரன்களையும், குயின்டன் டி காக் 70 ரன்னிலும் விக்கெட்டி இழக்க, இறுதிவரை போராடிய கீரன் பொல்லார்ட் 34 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியாதால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் யூனிகார்ன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.