
Kieron Pollard Record: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய கீரன் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், இத்தொடரில் இன்று நடைபெற்ற சேலஞ்சர் சுற்று ஆட்டத்தி எம்ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய கீரன் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் கீரன் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 46ஆவது ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள் வரிசையில் கீரன் பொல்லார்ட் இங்கிலாந்தின் ஆலெக்ஸ் ஹேல்ஸை முந்தியுள்ளார். முன்னதாக அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் கீரன் பொல்லார் ஆகியோர் தலா 45 முறை ஆட்டநாயகன் விருதை வென்று மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தது.