
ஐபிஎல் 2022 தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று இறுதி கட்ட பரபரப்பில் மும்பை நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முக்கியமான 61ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டி கொல்கத்தாவுக்கு வாழ்வா – சாவா என்ற போட்டியாக அமைந்த நிலையில் டாஸ் என்ற அந்த அணி முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதற்கேற்றார்போல் பேட்டிங் செய்யாத அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் வெங்கடேஷ் ஐயர் 7 (6) அஜிங்கிய ரகானே 28 (24) நிதிஷ் ராணா 26 (16) என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர்.
அந்த நிலைமையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 15 (9) ரன்களிலும் ரிங்கு சிங் 5 (6) ரன்களிலும் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர். அதனால் 94/5 திணறிய கொல்கத்தா 150 ரன்களை தாண்டுமா என்று கேள்வி எழுந்த நிலையில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் வழக்கம்போல தனது முரட்டுத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.