
KKR and India pacer Prasidh Krishna tests COVID-19 positive (Image Source: Google)
கேகேஆர் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா. இவருக்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கேகேஆர் அணியைச் சேர்ந்த டிம் செய்ஃபெர்டிற்கு தொற்று உறுதியான நிலையில் தற்போது பிரஷித் கிருஷ்ணாவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது அந்த அணி வீரர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் அடுத்த மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பிரஷித் கிருஷ்ணா தற்போது இந்திய அணியுடன் பயணிப்பாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.