ஸ்லோ ஓவர் ரேட்: கேகேஆர் வீரர்களுக்கு அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக செய்த தவறால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ரானாவுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தட்டுதடுமாறி 144 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சிவம் துபே 48 ரன்கள் அடித்திருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்பின்னர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தினர்.
145 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு பவர்-பிளே ஓவர்களுக்குள் மூன்று விக்கெடுகள் பறிபோனது. அதன் பிறகு உள்ளே வந்த ரிங்கு சிங் உடன் ஜோடி சேர்ந்த நித்திஷ் ரானா, அணியை சரிவிலிருந்து மீட்டார். இந்த ஜோடி சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்தது. இருவரும் அரைசதம் கடந்தனர். 18.3 ஓவர்களில் இலக்கை கடந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றனர்.
Trending
இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. இதனால் அந்த அணியின் கேப்டன் நித்திஷ் ராணாவிற்கு 24 லட்சம் அபராதம் மற்றும் இரண்டாவது முறையாக வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் இதற்கு முன்பாக ஒருமுறை குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்பதால் அப்போது 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு லெவல் ஒன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டார்.
இப்போது இரண்டாவது முறையாக அதே தவறை செய்திருக்கிறார். இன்னும் ஒரு முறை இந்த தவறை செய்தால் குறைந்தபட்சம் ஒரு போட்டிகள் கொல்கத்தா அணியின் கேப்டனை வெளியில் அமர்த்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியின் கேப்டனுக்கு மட்டுமல்லாது மற்ற வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேப்டனுக்கு 24 லட்சம் ரூபாய், மற்ற வீரர்களுக்கு தலா ஆறு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
Win Big, Make Your Cricket Tales Now