ஐபிஎல் 2022: தேர்வு குழு சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
தேர்வுக்குழுவில் அணியின் பொறுப்பாளரும் பங்கேற்றுக் கொள்வதாக கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஷ் ஐயர் கூறியிருந்த நிலையில் தற்போது அதை மறுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 123 ரன்களை மட்டுமே எடுத்தது.
Trending
இதன்மூலம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி. இந்நிலையில் இதற்கு முந்திய போட்டியில் தேர்வுக்குழுவில் அணியின் பொறுப்பாளரும் பங்கேற்றுக்கொள்வதாக கருத்து கூறியிருந்தார் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஷ் ஐயர். இது கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நேற்றைய ஆட்ட முடிவில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஷ் ஐயர், “விளையாடத வீரர்களை ஆறுதல் படுத்தவே அணியின் பொறுப்பாளர் பங்கேற்பார். இது அவர்களுக்கு கூடுதல் சுமையான வேலை. நான் இதைத் தான் கூற முயன்றேன். அது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டது” என தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now