ஐபிஎல் 2025: முதல் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை?
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் என்றும், முதல் போட்டியில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் மாதம் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏலம் நடத்தப்பட்டது.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர்.
இதுதவிர்த்து, யாரும் எதிா்பாராத வகையில் இந்திய வீரா் வெங்கடேஷ் ஐயா் ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டாா். மேலும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. அதேசமயம் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இதனால் நடப்பு ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது மார்ச் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்ற தகவல்கள் வெளியாகின. மேற்கொண்டு இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கும் என்பது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
KKR vs RCB
— CRICKETNMORE (@cricketnmore) February 13, 2025
22nd Match
Eden Gardens#IPL2025 #KKRvRCB pic.twitter.com/mh5zZagGhu
அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸை அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளதாகவும், இப்போட்டியில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இதுதவிர்த்து இத்தொடரின் முதல் தகுதிச்சுற்று மற்றும் எலிமினேட்டர் சுற்று ஆட்டங்கள் ஹைதராபாத்திலும், இரண்டாவது தகுதிச்சுற்று மற்றும் இறுதிப்போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதனையும் பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை. மேலும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இரண்டாவது தகுதிகொல்கத்தாவில் நடைபெறும் எனவும், முதலாவது தகுதி சுற்று மற்றும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. ஒளிபரப்பு நிறுவனங்களில் கோரிக்கையை ஏற்று ஐ.பி.எல் தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now