
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கிய இந்தியாவில் நடைபெற்று வருகிறது . 46 போட்டிகள் முடிவடைந்த நிலையில் குஜராத்,லக்னோ ,சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதல் நான்கு இடங்களில் இருக்கிறது . பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக பங்கேற்றுள்ள அனைத்து அணிகளும் போராடி வருகின்றன . எல்லா அணிகளுமே தற்போது வரை பிளே ஆப் சுற்றுக்கான போட்டியில் இருந்தாலும் ஹைதராபாத் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது .
இனி வரும் அனைத்து போட்டிகளிலும் அவர்கள் தொடர்ச்சியாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் . இந்நிலையில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் தனது தனது சொந்த காரணங்களுக்காக தொடரில் பங்கேற்க முடியாத நிலையில் வங்கதேசம் திரும்பியிருக்கிறார் . அவரது உறவினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவசரமாக நாடு திரும்பி இருக்கிறார் .
டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தின் போது 50 லட்சம் ரூபாய்க்கு லிட்டன் தாசை ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி. இந்த ஐபிஎல்லில் ஒரு போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் அவர் நாடு திரும்பி உள்ளார் . தற்போது அவருக்கு மாற்று வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனுமான ஜான்சன் சார்லஸை ஒப்பந்தம் செய்து இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி . இவர் இரண்டு முறை வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலக கோப்பை போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற போது அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .