IND vs SA: வாய்ப்பு மறுக்கப்பட்ட விரக்த்தியில் நிதிஷ் ராணா!
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் நிதிஷ் ராணாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
வரும் ஜூன் 9ஆம் தேதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 போட்டிகள் தொடங்குகின்றன. இந்நிலையில், இந்தப் போட்டியில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.
அதன்படி, இந்தத் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அணியின் தற்காலிக கேப்டனாக கே.எல்.ராகுலும், துணை கேப்டனாக ரிஷப் பந்தும் செய்லபாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Trending
மேலும் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஸ்னோய், அக்சர் பட்டேல், புவனேஸ்வர்குமார், ஹர்சல் பட்டேல், அவேஷ் கான், ஆர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் சிலர் முதல்முறையாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்காக இந்த தொடரில் அறிமுக வீரர்களாக ஆடும் லெவனில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 361 ரன்களை எடுத்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் நிதிஷ் ராணாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியில் சேர்க்கப்படாததால் ஏமாற்றமடைந்துள்ள அவர், 'விரைவில் மாற்றம் நிகழும்' என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
28 வயதான நிதிஷ் ராணா கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். ஆடிய 3 ஆட்டங்களிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அந்த சமயத்தில் நிதிஷ் ராணா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''சமூக ஊடகங்கள் வெற்றிகளை வெளியிடுவது மட்டுமல்ல, எங்கள் தோல்விகளையும் வெளியிடுகின்றன. இந்த சுற்றுப்பயணம் நான் திட்டமிட்டபடி அல்லது எதிர்பார்த்தபடி நடக்கவில்லை, ஆனால் எனது கடைசி 3 ஆட்டங்களில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
பேட்டை என் கைகளில் பிடித்த காலத்திலிருந்தே, அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பை மட்டுமே நம்பினேன். எநான் தொடர்ந்து முன்னேறுவேன். நான் வலுவாக வளர்ந்து கொண்டே இருப்பேன், எனக்கும் எனது அணிக்கும் பெரிய வெற்றியைத் தேடித் தருவேன்" என்று ராணா கூறியிருந்தது தற்போது பகிரப்பட்டு வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now