
KKR v RR: 54th IPL Match Probable Playing XI - The Last Chance (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ஷார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2ஆவது ஆட்டத்தில் ஈயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சீசனில் 12 புள்ளியுடன் இருக்கும் கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இப்போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. மிகப்பெரிய வெற்றியை பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் ராஜஸ்தான் அணி இருக்கிறது. அந்த அணியின் நிலை பஞ்சாப்பை போன்றே உள்ளது.
நாளையுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. நாளைய ஆட்டங்களில் மும்பை- ஐதராபாத், டெல்லி- பெங்களூர் அணிகள் மோதுகின்றன.