கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 57ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடிவுள்ள 11 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வி மற்றும் ஒரு முடிவில்லை என 11 புள்ளிகளுடன் பட்டியளில் 6ஆம் இட்த்தில் உள்ளது. மேற்கொண்டு அந்த அணி அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இனிவரும் போட்டிகளில் அந்த அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதிலும் குறிப்பாக அணியின் பேட்டிங் ஆர்டரில் ரஹானே, ரகுவன்ஷியைத், ஆண்ட்ரே ரஸல் தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் அணியின் பந்துவீச்சு துறையில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, வைபவ் ஆரோரா, ஹர்ஷித் ராணா ஆகியோர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விசயமாக பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: ரஹ்மனுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ரமன்தீப் சிங், ஆண்ட்ரே ரசல், ரோவ்மன் பாவெல், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி
சென்னை சூப்பர் கிங்ஸ்
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 8 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்தில் தொடர்கிறது. இதன் காரணமாக அந்த அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்தும் முதல் அணியாக வெளியேறியுள்ளது. இதனால் இத்தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்கிறது.
அணியின் பேட்டிங்கில் ஷேக் ரஷீத், அயூஷ் மாத்ரோ உள்ளிட்ட இளம் வீரர்களுடன் சாம் கரண், டெவால்ட் பிரீவிஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பந்துவீச்சில் நூர் அஹ்மத், கலீல் அஹ்மத் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மதீஷா பதிரானா ரன்களை வாரி வழங்குவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: ஷேக் ரஷித், ஆயுஷ் மத்ரே, சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் தூபே, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), தீபக் ஹூடா/உர்வில் படேல், நூர் அகமது, கலீல் அகமது, மத்திஷா பத்திரனா/நாதன் எல்லிஸ்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் – 31
- சென்னை சூப்பர் கிங்ஸ் – 19
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 11
- முடிவில்லை - 01
Also Read: LIVE Cricket Score
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ரஹ்மனுல்லா குர்பாஸ்
- பேட்ஸ்மேன்கள் - ஆயுஷ் மாத்ரே, அஜிங்க்யா ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, டெவால்ட் ப்ரீவிஸ்
- ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ஆண்ட்ரே ரஸல்
- பந்துவீச்சாளர்கள் - மத்திஷ பத்திரனா, வருண் சக்ரவர்த்தி, நூர் அஹமத்
Win Big, Make Your Cricket Tales Now