Advertisement

ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்!

கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 29, 2024 • 14:41 PM
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

 

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 47ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதில் பார்ப்போம். 

Trending


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பத்தில் தொடர்ச்சியான வெற்றிகளை குவித்த நிலையில், கடைசியாக விளையாடிய ஒருசில போட்டிகளில் இறுதிவரை போராடியும் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக இமாலய இலக்கை நிர்ணயித்த போதும் அந்த அணியால் வெற்றியை ஈட்டமுடியாமல் போனது. குறிப்பாக பெங்களூரு அணிக்கெதிரான போட்டியிலும் ஏறத்தாழ தோல்வியைத் தழுவிய அந்த அணி, இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

கேகேஆர் அணியின் பேட்டிங்கில் சுனில் நரைன், பிலிப் சால்ட் இணை தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்களும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டுவருவது அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. மறுபக்கம் பந்துவீச்சில் சுனில் நரைன் ரன்களை கட்டுப்படுத்தினாலும், மற்ற வீரர்கள் தொடர்ச்சியாக ரன்களை வாரி வழங்குவது அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: பில் சால்ட், சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், ரின்கு சிங், துஷ்மந்த சமீரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சரிவை சந்தித்தாலும், அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றிபெற்று தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. அதன்படி அந்த அணி இதுவரை 5 வெற்றி, 5 தோல்வி என்று 10 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் ஐந்தாம் இடத்தில் உள்ளது. அணியின் பேட்டிங் ஆர்டரில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் எதிரணிக்கு நடுக்கத்தைக் கொடுத்துவருகிறார். இந்த தொடரில் எந்தவொரு பந்துவீச்சாளரையும் பாரபட்சம் பார்க்காமல் சிங்ஸர்களை விளாசிவரும் அவர், எதிரணிக்கு புது தலைவலியை ஏற்படுத்தி வருகிறார். 

அவருக்கு துணையாக ஷாய் ஹோப், ரிஷப் பந்த், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரால், அக்சர் படேல் போன்ற வீரர்களும் பேட்டிங்கில் சிறப்பாக செய்லபட்டுவருவது அணிக்கும் பலமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சை பொறுத்தவரையில் கலீல் அஹ்மத், முகேஷ் குமார், குல்தீப் யாதவ் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரும் அபாரமாக செயல்பட்டுவருவது அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளது. அதுபோக கடந்த போட்டியில் விளையாடிய லிஸாத் வில்லியம்ஸும் தனது வேகத்தால் மிரட்டி வருவதால் அது அணியின் பந்துவீச்சு யூனிட்டை மேலும் பலப்படுத்தியுள்ளது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் சர்மா, ஷாய் ஹோப், ரிஷப் பந்த் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், லிசாத் வில்லியம்ஸ், முகேஷ் குமார், கலீல் அகமது, ரசிக் சலாம்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement