ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 60ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மறுபக்கம் புள்ளிப்பட்டியலில் தங்ளது முதலிடத்தை தக்கவைக்க கேகேஆர் அணியும் போராடும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காத. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 11 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்விகள் என 16 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் இருப்பதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. இருப்பினும் அந்த அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெறுவதும் அவசிமாக பார்க்கப்படுகிறது.
அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் சுனில் நரைன், பிலீப் சால்ட்டின் அதிரடியான தொடக்கம் அந்த அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவர்களுடன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட வீரர்களும் சிறப்பாக் செயல்பட்டு வருகின்றனர். பந்துவீச்சில் நரைன், ரஸல், வருன் சக்ரவர்த்தி ஆகியோருடன் ஹர்ஷித் ரானா, வைபவ் அரோரா ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: பில் சால்ட், சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.
மும்பை இந்தியன்ஸ்
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியோ இந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய 12 போட்டிகளில் நான்கில் மட்டும் வென்று பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. இருப்பினும் நடப்பு தொடரில் ஏற்கனவே பெற்ற தோல்விக்கு, கொல்கத்தாவை பழிவாங்க மும்பை அணி முனைப்பு காட்டும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. மேற்கொண்டு புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் அடையவும் அந்த அணிக்கு இந்த வெற்றியானது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
அணியின் பேட்டிங்கை எடுத்துக்கொண்டால் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், நெஹால் வதேரா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் உள்ளிட்ட வீரர்கள் இருந்தாலும் இவர்கள் ஒருசேர ரன்களை குவிக்க தவறிவருவது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்ப்ரித் பும்ராவைத் தவிர்த்து பியூஷ் சாவ்லா, ஆகஷ் மத்வால், நுவான் துஷாரா போன்ற வீரர்கள் ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, நமன் தீர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா.
Win Big, Make Your Cricket Tales Now