கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 44ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து ஆசத்தியுள்ள நிலையில், கேகேஆர் அணி அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Also Read
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடிவுள்ள 8 போட்டிகளில் மூன்று வெற்றி மற்றும் ஐந்து தோல்விகளைச் சந்தித்துள்ளது. மேற்கொண்டு அந்த அணி அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. மேற்கொண்டு இனிவரும் போட்டிகளில் அந்த அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அதிலும் குறிப்பாக அணியின் பேட்டிங் ஆர்டரில் ரஹானே, ரகுவன்ஷியைத் தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் அணியின் பந்துவீச்சு துறையில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, வைபவ் ஆரோரா, ஹர்ஷித் ராணா ஆகியோர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விசயமாக பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: ரஹ்மனுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ரமன்தீப் சிங், ஆண்ட்ரே ரசல், மொயீன் அலி, ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.
பஞ்சாப் கிங்ஸ்
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த போட்டியில் அந்த அணி ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியை தழுவிய கையோடு இந்த போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் அந்த அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டியது அவசியமாக பார்க்கப்படுகிறது.
அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழப்பது அணிக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அணியின் பந்துவீச்சு துறை ஃபார்முக்கு திரும்பியுள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஆட்டத்தில் அந்த அணி வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து தன் பார்க்கவேண்டும்.
பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், வைஷாக் விஜய்குமார்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 34
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 21
- பஞ்சாப் கிங்ஸ் - 13
Also Read: LIVE Cricket Score
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - பிரப்சிம்ரன் சிங், ரஹ்மனுல்லா குர்பாஸ்
- பேட்ஸ்மேன்கள் - அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), நேஹால் வதேரா, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி
- ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன் (கேப்டன்), மார்கோ ஜான்சன்
- பந்துவீச்சாளர்கள் - வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.
Win Big, Make Your Cricket Tales Now