ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், நிதிஷ் ரானா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- இடம் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மழை பாதிப்புக்குள்ளான தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடம் வீழ்ந்தது. முந்தைய சீசனில் அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு வெளிநாட்டில் ஆபரேஷன் செய்ய இருப்பதால், இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகி விட்டார்.
மேலும் வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசனும் ஒதுங்கி உள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடுவதால் வங்கதேச வீரர் லிட்டான் தாஸ் இன்னும் அணியினருடன் இணையவில்லை. இவையெல்லாம் கொல்கத்தா அணிக்கு பின்னடைவாகும். ஆனால் அதேசமயம் ஜேசன் ராய் கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது அந்த அணிக்கும் கொஞ்சம் ஆறுதலளிக்கிறது.
அதே நேரம் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. அதிலும் இப்போட்டியில் டூ பிளெசிஸ், விராட் கோலியின் அபாரமான ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் பந்துவீச்சில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், டேவிட் வில்லி, கரண் சர்மா ஆகியோரும், பேட்டிங்கில் கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மைக்கேல் பிரேஸ்வெல் என டி20 நட்சத்திரங்கள் இருப்பது அந்த அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 30
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 16
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 14
உத்தேச லெவன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரஹ்மானுல்லா குர்பாஸ், மன்தீப் சிங், நிதிஷ் ராணா (கே), ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், கர்ண் சர்மா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி/டேவிட் வில்லி, முகமது சிராஜ்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - ரஹ்மானுல்லா குர்பாஸ்
- பேட்டர்ஸ் - விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், நிதிஷ் ராணா
- ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், மைக்கேல் பிரேஸ்வெல்
- பந்து வீச்சாளர்கள் - முகமது சிராஜ்/ஹர்ஷல் படேல், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ்
கேப்டன்/ துணைக்கேப்டன் - விராட் கோலி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஃபாஃப் டூ பிளெசிஸ்
Win Big, Make Your Cricket Tales Now