
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில், முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து, ராஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மழை பெய்யும் என்ற அபாயத்திற்கு மத்தியில் இப்போயானது நடைபெறுமா என்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து. ஏனெனில் நேற்றைய தினம் மழையின் காரணமாக கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணி வீரர்கள் தங்களின் பயிற்சிகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேற்கொண்டு இன்றைய தினமும் ஈடன் கார்டன் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பெய்யும் என்ற சூழல் இருப்பதன் காரணமாக ஆர்ஞ்சு அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டி நடக்குமா நடக்காதா என்ற அச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணியின் உத்தேச லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.