ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் சுவாரஸ்யத்தை கூட்டிவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
Trending
இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி ஆர்சிபியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதனால் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆர்சிபி அணி இன்றைய போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் உள்ளது. கேகேஆர் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் பெரிதளவில் சோபிக்காவிட்டாலும் பேட்டிங்கில் கலக்கும் அணியாக இருந்து வருகிறது. அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்.
இவர் தவிர பில் சால்ட், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், ரிங்கு சிங் என பேட்டர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். இதனால் அந்த அணி தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருகிறது. மறுபக்கம் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ரானா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி போன்ற வீரர்கள் இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த தவறிவருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கேகேஆர் உத்தேச லெவன்: பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. ஆரம்பத்தில் கோலி மட்டும் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருந்த வந்த நிலையில் தற்போது டூ பிளெசிஸ் தனது ஃபார்மை மீட்டுள்ளார். பினிஷிங்கில் தினேஷ் கார்த்திக் அதிரடியில் மிரட்டி வருகிறார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவிட்டாலும் ராஜத் பட்டிதார் ரன்குவிக்கும் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்.
எனவே பேட்டிங்கில் எடுப்பாக இருந்தபோதிலும் போதிய அனுபவமின்மை காரணமாக பந்துவீச்சில் எடுபடாத அணியாகவே ஆர்சிபி இருந்து வருகிறது. அதிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ரீஸ் டாப்லி, லோக்கி ஃபெர்குசன் போன்ற வீரர்களாலும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்த முடியாதது அணிக்கு பெரும் பின்னடவைகாக பார்க்கப்படுகிறது. இதனால் அந்த அணி பந்துவீச்சில் சோபித்தால் மட்டுமே இப்போட்டியில் வெற்றிபெற முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
ஆர்சிபி உத்தேச லெவன்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத், வைஷாக் விஜய் குமார், லாக்கி பெர்குசன், ரீஸ் டாப்லி, யாஷ் தயாள்.
Win Big, Make Your Cricket Tales Now