
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் தற்போதுள்ள புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ச் அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி, ஒரு தோல்வி என 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் பில் சால்ட், சுனில் நரைன், ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க்கும் தனது ஃபார்மிற்கு திரும்பி விட்டார். அவருடன் ரஸல், நரைன், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ரானா போன்ற வீரர்களும் பந்துவீச்சில் இருப்பதால் அந்த அணியில் பெரிதளவில் மாற்றங்கள் ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சொந்த ஊரில் விளையாடுவது கொல்கத்தாவுக்கு கூடுதல் பலமாகும்.