
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் நாளை மறுநாள் நடைபெறும் 3ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றுள்ளதால், நடப்பு சீசனிலும் மீண்டும் கோப்பையை வெல்லும் அணிகளாக கணிப்பட்டுள்ளன. மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- இடம் - ஈடன் கார்டன், கொல்கத்தா
- நேரம் - இரவு 7.30 மணி
பிட்ச் ரிப்போர்ட்