Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கோப்பையை வெல்லப்போவது யார்?

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Advertisement
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கோப்பையை வெல்லப்போவது யார்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கோப்பையை வெல்லப்போவது யார்? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 26, 2024 • 01:13 PM

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல்  தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இத்தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கேகேஆர் அணியானது இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.  இதனால் அத்தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் ஐபிஎல் கோப்பையையும் வெல்லும் முனைப்பில் ஹைதராபாத் அணி இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளது. அதேசமயம் இத்தொடரில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாக வலம் வரும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 26, 2024 • 01:13 PM

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Trending

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதுடன், சன்ரைசர்ஸை வீழ்த்தி முதல் அணியாகவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, இந்த சீசனில் மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டாப் ஆர்டரில் சுனில் நரைன் அசுர பலம் சேர்க்கக்கூடிய வீரராக திகழ்கிறார். அவருடன் தற்போது ரஹ்மனுல்லா குர்பாஸும் இணைந்துள்ள கூடுதல் வலுசேர்த்துள்ளது.

அதேபோல் வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், ரிங்கு சிங், நிதீஷ் ரானா ஆகியோரும் சிறப்பான ஃபார்மில் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சென்னை மைதானத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுடன் வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ரானா, வைபவ் அரோரா, ஆண்ட்ரே ரஸல் ஆகியோரும் தங்களது ஃபார்மில் இருப்பதால் நிச்சயம் இப்போட்டியில் எதிரணி வீரர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கடந்த மூன்று சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தடுமாறி வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது, நடப்பு ஐபிஎல் சீசனில் பாட் கம்மின்ஸின் கேப்டன்சியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த சீசனின் லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தை பிடித்த சன்ரைசர்ஸ் அணியானது, முதல் தகுதிச்சுற்றில் கேகேஆரிடம் தோல்வியைத் தழுவினாலும், இரண்டாவது தகுதிச்சுற்றில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால் நிச்சயம் அந்த அணி கோப்பையையும் வென்று சாதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

அணியின் பேட்டிங்கை எடுத்துக்கொண்டால் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா அணியின் முக்கிய பேட்டர்களாக உள்ளனர். அவர்களுடன் தற்போது ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் தங்களது ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்பட்டாலும், ஐடன் மார்க்ரம் மீண்டும் சொதப்பியுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் கிளென் பிலீப்ஸ் அணியில் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அணியின் பந்துவீச்சில் நடராஜன், புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், பாட் கம்மின்ஸ் ஆகியோர் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ராகுல் திரிபாதி, நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத்,  ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், தங்கராசு நடராஜன்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement