ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றில் கேகேஆர், ராஜஸ்தான், ஹைதராபாத், ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் முன்னேறியுள்ள நிலையில் இத்தொடரின் நாக் அவுட் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளதுடன், இரு அணிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
Trending
ஐபிஎல் தொடரில் இரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 3 தோல்வி, 2 முடிவில்லை என்று 20 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பிடித்ததுடன் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றை எட்டியது. இதன் மூலம் கேகேஆர் அணியானது ஐபிஎல் தொடரில் 8ஆவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
அணியின் பேட்டிங் வரிசையில் பில் சால்ட் இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சுனில் நரைன், ரஹ்மனுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், நிதீஷ் ரானா போன்ற வீரர்கள் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அணியின் பந்துவீச்சில் நரன், வருண் சக்ரவர்த்தி ஆகியோருடன் மிட்செல் ஸ்டார், வைபவ் அரோரா, ஹர்ஷித் ரானா ஆகியோரும் உள்ளது எதிரணிக்கு தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.
Which Team Do You Think Are favourite To Reach The Final Tonight? #KKRvSRH pic.twitter.com/oQzjCD369h
— CRICKETNMORE (@cricketnmore) May 21, 2024
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ச் ஹைதராபாத் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 14 ஆட்டங்களில் 8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 17 புள்ளிகள் பெற்று ராஜஸ்தானுடன் சமநிலை வகித்தாலும், ரன்-ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியளில் இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தியது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7ஆவது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அணியின் பேட்டிங் ஆர்டரில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, நிதீஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமாத் உள்ளிட்ட வீரர்கள் எதிரணிக்கு தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், நடராஜன், மயங்க் மார்கண்டே, விஜயகாந்த் வியாஸ்காந்த்,ஷபாஸ் அஹ்மத், ஜெய்தேவ் உனாத்கட் ஆகியோரும் கேப்டன் பாட் கம்மின்ஸும் சிறப்பான ஃபார்மில் உள்ளது அணிக்கு சாதமாக உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் தலைவர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, தங்கராசு நடராஜன்.
Win Big, Make Your Cricket Tales Now