ஐபிஎல் 2023: டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஐபிஎல்லில் இருந்து விலகினார் சாம் பில்லிங்ஸ்!
2023ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை சேர்ந்த பிரபல வீரர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசனனுக்காக ஆரம்ப பணிகளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்குகிறது. இதற்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ், 2023-ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்
இவரை கொல்கத்தா அணி கடந்தாண்டு ஐபிஎல் ஏலத்தின் ரூபாய் 2 கோடிக்கு ஏலம் எடுத்தது என்பதும், இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் 8 போட்டிகளில் 169 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது
டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப் போவதாகவும், அதனால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாகவும் சாம் பில்லிங்ஸ் அறிவித்துள்ளார். இது அந்த அணிக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now