Advertisement

ஐபிஎல் அணிகளுக்கு வார்னிங் கொடுத்த சுனில் நரைன்!

உள்ளூர் போட்டியில் 7 ஓவர்கள் வீசி, ஏழு மெய்டன் செய்து, 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேன்.

Advertisement
KKR's Sunil Narine Sends Warning To Other Teams With Scary Spell
KKR's Sunil Narine Sends Warning To Other Teams With Scary Spell (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 22, 2023 • 01:58 PM

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வருகிற மார்ச் 31ஆம் தேதி தொடங்குகிறது. சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் வீரர்களை தவிர மற்ற வீரர்கள் தங்களது ஐபிஎல் அணிகளுடன் இணைந்து பயிற்சியையும் துவங்கிவிட்டனர். உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேன், ஐபிஎல் போட்டிகளுக்காக இந்தியாவிற்கு வந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைவதற்காக விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 22, 2023 • 01:58 PM

ஆனால் அவரது விமானம் தமதமாயுள்ளது. இதைடடுத்து அவர் அடுத்த பிளைட் வருவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் எனவும் தெரியவந்ததால், அதற்குள் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டு செல்லலாம் என்று மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளார். டிவிஷன் 1 டெஸ்ட் தொடரில், இவர் குயின்ஸ் பார்க் கிளப் அணிக்காக விளையாடினார். கிளார்க் ரோடு அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்சில் குயின்ஸ் பார்க் அணி பவுலிங் செய்தது.

Trending

அதில் முதல் இரண்டு விக்கெட்டுகள் போனபிறகு பவுலிங் செய்ய வந்த சுனில் நரேன், வீசிய 7 ஓவர்களில், அனைத்தையும் மெய்டன் செய்து, 7 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரளவைத்துள்ளார். இதனால் முதல் இன்னிங்சில் கிளார்க் ரோடு அணி 76 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. அதன் பிறகு பேட்டிங் செய்த குயின்ஸ் பார்க் கிளப் அணி, நாள் முடிவில், முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் அடித்தது.

பிளைட் தாமதம் செய்ததால் இன்னும் ஒரு போட்டியில் விளையாடி விட்டு செல்லலாம் என்று முடிவெடுத்த நரேன் இப்படி கதிகலங்க வைக்கும் அளவிற்கு அபாரமாக வந்து வீசியது ஐபிஎல் அணிகளுக்கு எச்சரிக்கை விடும் வண்ணம் இருக்கிறது என்று கூறிவருகின்றனர். டிவிஷன் 1 டெஸ்ட் தொடரில், தொடர்ச்சியாக நான்கு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி மொத்தம் 31 விக்கெட்டுகளை இந்த தொடரில் இதுவரை சுனில் நரேன் கைப்பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement