
பயிற்சியை துவங்கி விட்டார்கள் என்பதற்காக மட்டுமே இவர்களை இந்திய அணியில் சேர்க்க கூடாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார்.
ஐசிசி நடத்தும் 13ஆவது உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த முறை உலககோப்பையை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்து நடத்துகிறது. இதனால் ஒவ்வொரு அணியும் எப்படியாவது இந்த முறை உலக கோப்பையை வென்று விட வேண்டும் என்று கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு , இருதரப்பு தொடர்களில் அதிகமாக பங்கேற்று அணியை செட் செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
ஆனால் தற்போது இருக்கும் நிலைமையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மற்றும் பௌலிங் லைன்-அப் என இரண்டுமே சற்று பரிதாப நிலையில்தான் உள்ளது. ஏனென்றால் ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல்,பும்ரா, மற்றும் ரிஷப் பண்ட் உள்ளிட்ட இந்திய அணி முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் இவர்கள் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவார்களா..? மாட்டார்களா..?என்ற குழப்பம் இந்திய வட்டத்தில் பரவலாக உள்ளது.