Advertisement

SA vs IND, 1st ODI: தொடக்க வீரராக களமிறங்குகிறேன் - கேஎல் ராகுல்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடக்க வீரராகக் களமிறங்கவுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். 

Advertisement
KL Rahul Confirms Himself As Opener For South Africa ODIs
KL Rahul Confirms Himself As Opener For South Africa ODIs (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 18, 2022 • 07:23 PM

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் (ஜனவரி 19) தொடங்குகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 18, 2022 • 07:23 PM

இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல். ராகுலும் துணை கேப்டனாக பும்ராவும் செயல்படவுள்ளார்கள்.

Trending

இந்நிலையில் செய்தியாளர்களிடம் இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் கூறியதாவது, சமீபகாலமாக 4ஆம், 5ஆம் நிலைகளில் பேட்டிங் செய்துள்ளேன். ரோஹித் சர்மா அணியில் இல்லாததால் தொடக்க வீரராகக் களமிறங்குகிறேன். எனினும் சில நேரங்களில் தொடக்க வீரராகவும் சில நேரங்களில் நடு வரிசையிலும் நான் விளையாட வேண்டியிருக்கும். 

இது எனக்குச் சம்மதமே. எல்லோருக்கும் தனிப்பட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டாலும் சூழலுக்கு ஏற்றாற்போலவும் விளையாட அனைவரும் தயாராக இருக்கவேண்டும். 6ஆவது பந்துவீச்சாளர் அணிக்கு அவசியம். வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அபாரமான திறமையை அவர் கொண்டுள்ளார். 

இந்திய அணிக்குத் தலைமை தாங்குவது ஒவ்வொரு வீரரின் கனவு. நானும் விதிவிலக்கல்ல. இந்திய அணியின் கேப்டன் பதவி எனக்கு வழங்கப்பட்டால் இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்கு என்னுடைய பங்களிப்பை அளிப்பேன்” என்று தெரிவித்தார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement