
KL Rahul Goes For Golden Duck Against 19-Year Old Naseem Shah; Watch Video Here (Image Source: Google)
ஆசிய கோப்பை தொடரின் 15ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணி, ஷாட் பாலை வீசி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 43 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் துணை நிற்க தவறினர். இதனால் பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனையடுத்து, இந்திய வீரர் கேஎல் ராகுல், நடப்பாண்டில் முதல் முறையாக டி20 போட்டியில் களமிறங்கினார். ஐபிஎல் தொடருக்கு பிறகு 2 மாதம் கழித்து இந்திய டி20 அணிக்கு ராகுல் திரும்பினார்.