
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் நாளை தொடங்குகிறது இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.முதல் முறையாக ஒருநாள் அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக களமிறங்குகிறார்.இதில் 5 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் சாதாரண வீரர்களாக விராட் கோலி களமிறங்குகிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எல். ராகுல், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடைந்த டெஸ்ட் தோல்வி மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.இதனால் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடுவோம். விராட் கோலி கேப்டனாக இந்திய அணிக்கு என்று ஒரு தரத்தையும் நிலையையும் நிர்ணயித்துள்ளார். அந்த வகையில் நாங்களும் செயல்படுவோம்
நான் தோனி மற்றும் கோலி இருவரின் தலைமையின் கீழ் விளையாடியுள்ளேன். அவர்கள் இருவரிடமும் நிறைய விசயங்களை கற்று கொண்டுள்ளேன். அந்த பாடம் கேப்டனாக இருக்கும் போது நிச்சயம் கைக்கொடுக்கும். வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை கேப்டனாக விராட் கோலி எங்களிடம் விதைத்துள்ளார். அந்த நம்பிக்கையுடன் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறோம்.